Skip to Content

பாரதியின் பாஞ்சாலி சபதம் : உரை

பாரதியின் பாஞ்சாலி சபதம் : உரை - ஹரி கிருஷ்ணன்
அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்து கொண்டுவிட முடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத்தின் அற்புத அழகையும் பொருள் சுவையையும் முழுமையாக உள்வாங்க வேண்டுமானால் இன்று புழங்கும் நடையில் எழுதப்பட்ட ஓர் உரை அவசியமாகிறது. இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுதான். மாணவர்கள் தொடங்கி மூத்தவர்கள் வரை அனைவரும் புரிந்து-கொள்ளும் வகையில் பாஞ்சாலி சபதம் பாடல் வரிகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேகமான உரை விளக்கம் இதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அழகுக்கு அழகும் எளிமைக்கு எளிமையும் கூட்டும் இந்த அரிய முயற்சி அனைவரையும் கவரப்போவது உறுதி. வியாச, வில்லி பாரத மூலங்களிலிருந்து மேற்கோள்களுடன்! ஹரி கிருஷ்ணன் யாப்பிலக்கணம், திருக்குறள், சங்க இலக்கியம், எதுவானாலும் சுவாரசியமாக, ஒரு கதைசொல்லியின் நிதானத்துடன் எழுதும் ஹரி கிருஷ்ணன் பிறவிக் கவிஞர். மதுரை பாரதி யுவ கேந்திராவின் ‘பாரதி புரஸ்கார்’ விருது, சென்னை ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயத்தின் ‘செந்தமிழ் இலக்கிய வித்தகர்’ பட்டம் மற்றும் சென்னை வைஷ்ணவ மஹா சங்கத்தின் ‘ஸ்ரீவைணவ நூலாசிரியர்’ பட்டம் பெற்றவர்.

₹ 350.00 ₹ 350.00

Not Available For Sale

This combination does not exist.