Skip to Content

பாரதிய (அ)நியாயச் சட்டங்கள்

பாரதிய (அ)நியாயச் சட்டங்கள் - வாஞ்சிநாதன் சித்ரா
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து வெளிவரும் முதல் தமிழ் நூல். நாடாளுமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்புகள் வந்தன. இந்தச் சட்டங்கள் பொதுமக்களின் உரிமையை மறுக்கிறது. காவல் துறையின் கைகளில் அதிகாரத்தை வழங்குகிறது. மொத்தத்தில் தேசமே சர்வாதிகாரம் நோக்கிச் செல்வதற்கான பாதையாக அமைகிறது என்று அஞ்சினர் ஒரு சாரார். ஆனால் ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடியும் இந்தக் குற்றவியல் சட்டங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று பெருமிதம் கொள்கின்றனர். உண்மையில், புதிய குற்றவியல் சட்டங்கள் என்ன சொல்கின்றன? அவற்றில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? குற்றவியல் சட்டங்களால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக மாறப் போகிறது? விலாவாரியாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் வாஞ்சிநாதன் சித்ரா. இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டது தொடங்கி, அந்தச் சட்டங்கள் கண்ட மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, இறுதியாகக் குற்றவியல் சட்டங்கள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் வாஞ்சிநாதன் சித்ரா. சட்டங்களின் அடிப்படை குறித்தும், அதன் சாராம்சம் குறித்தும் சாதாரண வாசகரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில், அதே சமயம் ஆழமான ஆதாரங்களோடு இந்நூலை எழுதியுள்ளார்.

₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.