Skip to Content

பாரம்பரியம் காக்கும் திருத்தலங்கள்

பாரம்பரியம் காக்கும் திருத்தலங்கள் - முன்னூர் கோ.ரமேஷ்
கலை பொக்கிஷங்களை பேணிக் காப்போம்..! முன்னோரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில்கள், சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பல நூற்றாண்டுகள் கடந்தும் எடுத்துக் காட்டும் கலைப் பொக்கிஷங்களாக உள்ளன. கோயில்கள் சார்ந்தே சமூக மேம்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முகவரியாக உள்ள கோயில்களை, காப்பதும் போற்றுவதும் நமது தலையாயக் கடமையாகும். பல தலைமுறைகளுக்கு பாடம் சொல்லும் வண்ணம் கோயில்கள் அமைய வேண்டும் என்ற வகையில் அவை மன்னர்களாலும், சான்றோர் பெருமக்களாலும் நிர்மாணிக்கப்பட்டன. தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக, நாம் பண்டைய தமிழகம், கோட்டைகள், தமிழகக் கோயில்கள், அவற்றின் வரலாற்றுச் சிறப்புகள், கோயிலுக்குள் இயங்கிய வைத்தியசாலைகள் குறித்து அறிகிறோம்.
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.