Skip to Content

நடுப்போரில் தீவைத்தல்

நடுப்போரில் தீவைத்தல் : இலக்கியம் தத்துவம் அரசியல் சினிமா விமர்சனக் கட்டுரைகள் - கல்யாணராமன்

பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திரைப்படம் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன.  இந்தக் கட்டுரைகளில் தத்துவம் இருக்கிறது. அரசியல் கூர்ப்புண்டு. விஞ்ஞானக் கண்ணோட்டம் இழையோடுகிறது. அழகியல் நோக்குள்ளது. நுனிப்புல் மேய்தல்? இல்லை.  ஆழ்வார் பாசுரங்கள், மணிமேகலை, திருக்குறள் முதலிய பண்டைய இலக்கியங்கள் முதல் கு. அழகிரிசாமி, தி. ஜானகி ராமன், தஸ்தயேவ்ஸ்கி, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், ஆத்மாநாம், பெருமாள்முருகன், பெருந்தேவி முதலான நவீன படைப்பாளிகளின் ஆக்கங்கள்வரை பல்வேறு இலக்கியப் பிரதிகளைப் பற்றிய ஆழமான, தனித்துவமான அலசலை இக்கட்டுரைகளில் காணலாம். பா. இரஞ்சித், ராம் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களைப் பற்றிய பார்வையும் இதில் உள்ளது. இலக்கிய வாசகர்களும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

₹ 590.00 ₹ 590.00

Not Available For Sale

This combination does not exist.