Skip to Content

நலம் தரும் நான்கெழுத்து

நலம் தரும் நான்கெழுத்து - டாக்டர் ஜி.ராமானுஜம்
இன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், நாம் உணரத் தவறும், சிகிச்சை எடுத்து சீர்படுத்திக்கொள்ளத் தவறும் விஷயம் மன நலம். நமது சமூகத்தில் மன நலம் பேணுவது பொதுவாகப் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. மன நலத்தைப் பேணுவது குறித்து நம்மில் பலருக்கும் ஒரு அலட்சியம் இருக்கிறது. அது உடல் நலனை பாதிக்கும் என்பதையும் கவனிக்கத் தவறுகிறோம். மன நலம் குறித்த அறிவியல்பூர்வ பார்வையின்மையே இதற்குக் காரணம். இந்தப் பின்னணியில் நம் உணர்ச்சிகளைக் குறித்து, உளவியல் சமநிலை குறித்துப் பேசுகிறது `நலம் தரும் நான்கெழுத்து’ புத்தகம். உளவியல் நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஜி. ராமானுஜம் இதை எழுதியுள்ளார். பொதுவாக மனநலம், உளவியல் குறித்த எழுத்து கடினமாக இருக்கும் என்ற நம்பிக்கையே நிலவுகிறது. அந்த நம்பிக்கையை உடைத்து, எளிமையாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவை ததும்ப எழுதுபவர் டாக்டர் ராமானுஜம்.
₹ 120.00 ₹ 120.00

Not Available For Sale

This combination does not exist.