Skip to Content

நக்ஸல் சவால்

நக்ஸல் சவால் - பி.வி.ரமணா தமிழில்: கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ்
வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது? ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ‘நக்ஸல்பாரி தீவிரவாதம்’ பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும், எப்படிப்பட்ட மக்கள் நக்ஸலின் கொள்கைகளால் கவரப்படுகிறார்கள்..? ஏன் கவரப்படுகிறார்கள்..? ராணுவமும் போலீஸும் திணறக்கூடிய வகையில் அவர்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு இருக்கிறது? போன்ற பல்வேறு கோணத்தில் அனைத்தையும் ஆராய்கிறது இந்தக் கட்டுரைகள். இந்த ஆராய்ச்சியால் நக்ஸலைக் கட்டுப் படுத்த ஒரு தீர்வும் கிடைக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு வழியை ஆராய வேண்டும். வேலையில்லா இளைஞர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் அக்கறை செலுத்தவேண்டும். வேலையின்மையால் வறுமை ஏற்படுகிறது. வறுமையால் அவநம்பிக்கை, அதிருப்தி பரவுகிறது. கடைசியில் அது வன்முறையில் போய் முடிகிறது. அமைதி கெட்டு அராஜகம் தலைவிரித்து ஆடும் நிலையில் ஜனநாயகமே ஆட்டம் காண்கிறது. இதுதான் நாட்டை தற்போது எதிர்நோக்கியுள்ள பயங்கரப் பிரச்சனை.
₹ 80.00 ₹ 80.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days