நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்
நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம் : ஒரு திருநங்கையின் போராட்டமான வாழ்க்கை - அக்கை பத்மசாலி - தமிழில் : அகிலா
இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை பத்மசாலி சமூகத்தை நோக்கிய தனது போராட்டத்தை முன்வைக்கிறார். அனுதாபத்தையோ பரிதாபத்தையோ அவர் கோரவில்லை. சமூக ஏற்பையும் மரியாதையையும் கோருகிறார். நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அக்கையின் எழுத்து, ஒரு அரசியல் செயல்பாடாகும். இன்று இருக்கும் இடத்தை அடைவதற்காகத் தான் பட்ட வேதனை, அவமானம், குழப்பம், அவமதிப்பு, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி என அனைத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார். தனது கதை தன்னுடைய கதை மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகிறார்.