நெடும் பயணம்
நெடும் பயணம் - எஸ். ராமகிருஷ்ணன்
"புத்தகம் என்பது நமது அன்றாடப் பிரக்ஞையினுடைய ஒரு வெளிப்பாடகவும், ஒரு பகுதியாகவும், நமக்குச் சக்தி கொடுக்கக்கூடிய பல விஷயங்களில் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 'கசடதபற' அனுபவம் பதிப்புத் துறைக்கான பயிற்சியாக எனக்கு அமைந்தது. அதுவரை, பதிப்புத் துறையின் முக்கிய அம்சங்களான அச்சாக்கம், படைப்புகளைப் பார்ப்பது ஆகியவை பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அச்சாக்கம் குறித்த அடிப்படைப் பாடங்களைக் 'கசடதபற'வில் தான் கற்றுக் கொண்டேன். சிறு பதிப்பாளர்கள் தோன்றுவார்கள். மறைந்துவிடுவார்கள். ஆனால், ஒரு சிறு பதிப்பாளர் வெளியீட்டுத் துறையை விட்டகன்றால் இன்னொருவர் வருவார். இது ஒன்றுதான் தமிழ்ப் புத்தகத் துறையின் பெரிய நம்பிக்கை.”