நெருங்காதே நீரிழிவே: நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு
நெருங்காதே நீரிழிவே : நீரிழிவுக்கு நிரந்தர தீர்வு - டாக்டர் எஸ். விஜயராகவன் - சுஜாதா தேசிகன் டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரிணமாகக் குணப்படுத்த முடியாது!’ என்பதுதான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை. நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ்.விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலாசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டிஇருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக, எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார். முற்றிலும் அறிவியல்பூர்வமான, நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறையை யார் வேண்டுமானாலும் பின்பற்ற முடியும். நீரிழிவுக்கு நிரந்தரமாக குட் பை சொல்ல முடியும். கல்கியில் தொடராக வெளியான போதே வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்ட நூல் இது. இந்நூல் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக மீண்டுவிட்டீர்கள் என்பது நிச்சயம். |