Skip to Content

நேரத்தை உரமாக்கு

நேரத்தை உரமாக்கு - சோம. வள்ளியப்பன்

திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு. படிப்பு, தகுதி, செல்வம், புகழ், திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான். சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான, ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல், மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.

₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days