முயல் தோப்பு
சிறுகதை :
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளில் தனது பார்வையை ஊடுருவிச் செலுத்த முடிகிறது அவரால். வாசகரின் கவனம் சிறிதும் பிசகாமல் தன்வயப்படுத்தி புனல் வைத்து எண்ணை ஊற்றுவது போல் நமக்குள் நிரப்பி விடுகிறார்.