Skip to Content

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் - ரா. கிருஷ்ணன்
சுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.
₹ 150.00 ₹ 150.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days