Skip to Content

மரங்களின் மறைவாழ்வு

மரங்களின் மறைவாழ்வு - பீட்டர் வோலிபென் - தமிழில் : லோகமாதேவி
​மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து பதிலேதும் பேசாமல் நழுவிவிடவே முயல்வீர்கள். ஆனால் அவர், மரங்களுக்கு நினைவாற்றல் உண்டு, நாம் பேசுவதை அவை கேட்கும், அவற்றுக்கு ஒரு மொழி உண்டு, நண்பர்கள் உண்டு அவற்றால் வண்ணங்களை அறிந்துகொள்ள முடியும் என்றெல்லாம் சொன்னால் அவரிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடிவிடுவீர்கள். ஆனால் அவையெல்லாம் உண்மையென்று ஒரு வன ஆய்வாளரே ஆதாரங்களுடன் விளக்கினால் என்ன செய்வீர்கள்? மரங்கள் பற்றிய நமது எண்ணங்களைத் தவிடுபொடியாக்குகிறார் பீட்டர் வோலிபென். மரங்களுக்கும் பார்க்கவும் உணரவும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்கிறது அவரது இந்நூல். - பிரதீப் கிரிஷன் (புகழ்பெற்ற சூழலியளாளர்)
₹ 390.00 ₹ 390.00

Not Available For Sale

This combination does not exist.