மனது போல வாழ்க்கை 2.0
மனது போல வாழ்க்கை 2.0 - டாக்டர். ஆர்.கார்த்திகேயன்
பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மென்பொருள் பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், முதியோர் என வெவ்வேறு வாழ்க்கைச் சூழலை வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் அவர்களுக்கு விடும் சவால்களை, கேள்விக் கணைகளாக மாற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் தனக்கே அனுபவ அறிவோடு டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பதிலளித்தார். மனம் குறித்த அலசல் கட்டுரைகள் மற்றும் கேள்வி-பதில் பகுதி ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். இதனை படிக்கிற வாசகருக்கு தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். தன்னுடைய மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும், உலகில் எதிர்கொள்ளௌம் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் அழகாக உதவும்!