மனதோடு ஒரு சிட்டிங்
மனதோடு
ஒரு சிட்டிங் - சோம. வள்ளியப்பன் மனம் பற்றிய ‘இன்னொரு புத்தகம்’ அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி, என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைக்கிற புத்தகம். நுட்பமான பார்வை, எவரும் சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான அணுகுமுறைகள் கொட்டிக்கிடக்கிற பொக்கிஷம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ள, நிம்மதியாக வாழ, அற்புதமான விளக்கங்கள். முழுக்க முழுக்க மனது பற்றிய புத்தகம். மனதை புரிந்துகொள்ள, கைகொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க. மொத்தத்தில் மனதை ஆள... மனதோடு ஒரு சிட்டிங். மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரான சோம. வள்ளியப்பன் எழுதிய மனம் பற்றிய ‘உஷார் உள்ளே பார்’ ஒரு தளம் என்றால், மனதோடு ஒரு சிட்டிங், அடுத்தத் தளம், அடுத்த நிலை, அடுத்தக் கட்டம். ‘இட்லியாக இருங்கள்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’ போன்ற வெற்றிப் புத்தகங்கள் எழுதிய சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல் இது. |