Skip to Content

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா? - டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன் - லக்ஷ்மி மோகன்
ஆதி மனிதர்களின் மூளை எப்படிச் செயல்பட்டது என்பதில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன விஞ்ஞானம் மனித மூளை பற்றியும் மனம் பற்றியும் என்ன சொல்கின்றது என்பதுவரை அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்து வாழ்வியலும் ஆன்மிகமும் மனம், மூளை தொடர்பாக முன்வைக்கும் சிந்தனைகள், தீர்வுகள் ஆகியவற்றையும் மிக விரிவாக அழுத்தமாகச் சித்திரித்திருக்கிறார்.மூளைக்கும் இசைக்குமான தொடர்பு, மூளைக்கும் பக்திக்குமான தொடர்பு, மூளைக்கும் கலைக்குமான தொடர்பு என பல்வேறு அம்சங்களை அறிவியல்பூர்வமாகவும் ஆன்மிகபூர்வமாகவும் அலசி ஆராய்ந்து விரிவாக விளக்கியிருக்கிறார். ஆண்களின் மூளையும் மனமும் எப்படி எல்லாம் செயல்படும்... பெண்களின் மூளையும் மனமும் எப்படியெல்லாம் அதில் இருந்து வேறுபட்டுச் செயல்படும் என்பதைப் பல்வேறு சூழல்கள், உயிர்த்துடிப்பான உதாரணங்கள் மூலம் சித்திரித்து ஆண் பெண் மோதல்களை எப்படித் தீர்ப்பது என தனது மருத்துவப் பின்புலத்தின் துணையோடு அருமையாக விவரித்திருக்கிறார் டாக்டர் ஸ்ரீனிவாசன். நரம்பியல் மருத்துவத் துறையில் டாக்டர் ஸ்ரீனிவாசனின் சேவையைப் பாராட்டி, தமிழ்-நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில், ‘எமிரிடிஸ் புரொபஸராக’ நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவரது ‘பார்க்கின்ஸன்ஸ்’, ‘நினைவாற்றல் நிரந்தரமா?’, ‘தலைசுற்றல் தவிர்ப்போம்’ போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

₹ 180.00 ₹ 180.00

Not Available For Sale

This combination does not exist.