மகளிர் மட்டும்
மகளிர்
மட்டும் - டாக்டர் மகேஸ்வரி ரவி ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது? பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்? இனப்பெருக்க உறுப்புகளின் நலனைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?- இன்னும், பெண்களின் பலதரப்பட்ட பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் தெளிவாகச் சொல்கிறது இந்த நூல்.நூலாசிரியர் டாக்டர் மகேஸ்வரி ரவி, 1973-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். அறுவை சிகிச்சை இல்லாமல் கரு இணைப்புக் குழாய் அடைப்பை நீக்கி, கருத்தரிக்க வைத்த முதல் தென்னிந்தியப் பெண் மருத்துவர். |