Skip to Content

மகா பெரியவா

மகா பெரியவா : சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை - வீயெஸ்வி
‘எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக்கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்' எனும் ஞான உரை கூறிய காஞ்சி மகா பெரியவர், தன் வாழ்நாள் முழுதும் தவ வாழ்வு வாழ்ந்து அறநெறிகளையும் அருளுரைகளையும் வழங்கியவர். துறவு என்ற சொல்லின் வடிவமாக வாழ்ந்த ஞானத் துறவி அவர். பால பருவத்தில் சுவாமிநாதன் என்ற திருப்பெயரை மகா பெரியவர் பெற்றிருந்தபோது, அவர் துறவறம் பூண்ட உணர்ச்சிமிகு நிகழ்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. அப்பேர்ப்பட்ட ஞானத் துறவியின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது இந்த நூல். ‘சங்கீதத்தில் சங்கீதம்தான் முக்கியம். அதில் த்வைதமோ அத்வைதமோ எந்த பேதமும் இல்லைதான்' என்று சங்கீதம் பற்றி மகா பெரியவர் கூறியிருப்பதிலிருந்தே அவருக்கு இருக்கும் சங்கீத ஞானம் பற்றி அறிய முடியும். மகா பெரியவரின் பால பருவம் முதல்... அவரின் ஆன்மா இறைவனடி சேரும் வரையிலான அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் பல துறைகளில் அவருக்கிருந்த ஞானம் பற்றியும் விரிவாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் வீயெஸ்வி. மகா பெரியவா அருளாசி என்றென்றும் கிடைக்கப் பெறுவோம்!
₹ 460.00 ₹ 460.00

Not Available For Sale

This combination does not exist.