Skip to Content

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம் - சைபர் சிம்மன்

செல்பேசி நம்முடைய ஆறாவது விரலாக எப்போதோ மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொடங்கி பொழுதுபோக்குவரை செல்பேசி நமக்கு அளிக்கும் சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. அதன் ஒரு பகுதிதான், மோஜா எனப்படும் மொபைல் ஜர்னலிசம். கையில் ஒரு செல்பேசி இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இன்று ஒரு பத்திரிகையாளராக மாறி எந்தவொரு செய்தியையும் பொதுமக்களிடம் கொண்டுசென்றுவிடமுடியும். செய்தி சேகரிப்பதில் தொடங்கி, தகவல்களைச் சரி பார்ப்பது, திருத்துவது, புகைப்படங்களோ வீடியோவோ சேர்ப்பது என்று அனைத்தையும் ஒரு செல்பேசியில் செய்துமுடிக்கலாம். காட்சி, ஒலி, எழுத்து என்று அனைத்து வழிகளிலும் உங்கள் எண்ணங்களை லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். வெறும் கருவி மட்டுமல்ல, செல்பேசி என்பது ஒரு வலுவான ஆயுதம். சாமானியர்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வரை உலகம் முழுவதிலும் பலர் இன்று செல்பேசி இதழியலின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். டிஜிட்டல் உலகைத் தொடர்ந்து கவனித்துப் பதிவு செய்துவரும் சைபர் சிம்மனின் இந்நூல் இதழியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது உறுதி. சைபர் சிம்மன் தொழில்நுட்ப வலைப் பதிவாளர், சுயேட்சை பத்திரிகையாளர். இதழியல் துறையில் 20 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உள்ளவர்.

₹ 275.00 ₹ 275.00

Not Available For Sale

This combination does not exist.