Skip to Content

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 - காம்கேர் கே. புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒரே கடிதத்தை பல பேருக்கு அனுப்ப நினைப்பவர்கள் வேர்டையும் எக்ஸலையும் இணைக்கும் ‘மெயில் மெர்ஜ்’ என்ற ஆப்ஷன்; தகவல்களை முறைப்படுத்த உதவும் ‘டேபிள்’; பல வேலைகளை ஒருங்கிணைத்து ஒரே க்ளிக்கில் சீக்கிரம் வேலையை முடிக்கும் ‘மேக்ரோ’; மல்டிமீடியாக்களுடன் இணைந்து செய்யும் வேலை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ‘வேர்ட்’. வேர்ட் டாக்குமென்ட் ஃபைலை கிளவுட் கம்ப்யூட்டிங்கில் சேமித்து வைத்துக்கொண்டால் எங்கு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ளதோ அங்கே அந்த ஃபைலை திறந்து பார்க்கும் வசதி; பிடிஎஃப் ஃபைல்களைத் திறந்து பார்க்கவும் மாற்றங்கள் செய்து சேமிக்கவும் முடியும் என்ற வசதி ஆகிய வேர்ட் 2013&ல் மட்டுமே உள்ள சிறப்பான வசதிகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு அதை நீங்கள் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்தால் ‘வேர்ட்’-ல் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
₹ 235.00 ₹ 235.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days