Skip to Content

மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் 2013

மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் 2013 - காம்கேர் கே. புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும். பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம்.
₹ 265.00 ₹ 265.00

Not Available For Sale

This combination does not exist.