Skip to Content

லாஜிஸ்டிக்ஸ்: ஓர் அறிமுகம்

லாஜிஸ்டிக்ஸ்: ஓர் அறிமுகம் - பா.பிரபாகரன்
பிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தருவித்துக்கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி இரண்டையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்த்திவிட முடிகிறது. லாஜிஸ்டிக்ஸ் என்னும் மேஜிக் உலகம் நிகழ்த்திக்காட்டி இருக்கும் அற்புதம் இது. ஆயிரம் அலாவுதீன் பூதங்களுக்குச் சமமானது லாஜிஸ்டிக்ஸ். இந்தப் பூதத்தின் உதவி மட்டும் இல்லாவிட்டால், பஞ்சாபில் விளையும் கோதுமை தமிழ்நாட்டுக்கு வராது. ஆந்திராவில் விளையும் அரிசி, குஜராத்துக்குப் போகாது. அரபு நாடுகளில் எடுக்கப்படும் பெட்ரோல் நம்மூரில் கிடைக்காது. பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; உலக அளவில் வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி. லாஜிஸ்டிக்ஸ் பற்றிய அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.

₹ 140.00 ₹ 140.00

Not Available For Sale

This combination does not exist.