குருபிரசாதின் கடைசி தினம்
குருபிரசாதின்
கடைசி தினம் - சுஜாதா தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளி குருபிரசாத் செரெப்ரல் ஹெமரேஜால் பாதிக்கப்பட்டு மூளைக்குள் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்குப் போகிறான். முதலில் தொழிற்சாலைக்குள் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சரிவரச் சோதிக்கப்படாமல், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, துரதிஷ்டவசமாக அங்கிருந்தும் புறக்கணிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்படுகிறான். இந்தச் சம்பவச் சூழ்நிலைகளில் நேரக் கடத்தலில், தொழிற்சாலை யூனியன் நபர்களின் சுயநலம், தொழிற்சாலை அதிகாரி களின் அலட்சியம், தொழிலாளர்களின் சிந்திக்காத கோரஸ் குணம் போன்றவற்றைத் துல்லியமாக மனம் வலிக்கப் படம் பிடித்துக் காட்டுகிறார் சுஜாதா. |