Skip to Content

குறுந்தொகை

குறுந்தொகை - வ.ஐ.ச.ஜெயபாலன்
ஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் கவிதைகளை ‘குறுந்தொகை’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர் இளமையில் நாட்டுப்பாடல்கள், தேவார திருவாசகங்கள், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நந்தனார் சரித்திரத்தின் சில பகுதிகள், மறுமலர்ச்சிக் கால ஆங்கிலக் கவிதைகள் என அங்குமிங்குமாக அகப்பட்ட கவிதைகள், பாடல்கள் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் வாசித்தார். அவர் தன்னுடைய முதல் கவிதையான ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதும் முன்னர் பக்கம்பக்கமாகக் கவிதைகள் எழுதியிருந்தார். அவற்றுள் பாரதியாரின் சாயல் இருந்தது. ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையை எழுதி முடித்தபோதுதான் அவர் தன்னை ஒரு கவிஞனாக உணர்ந்தார். இன்றுவரை சங்கப் புலவர்களின் அஞ்சலோட்ட தீபத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை இந்த நூலுக்கான விமர்சனங்களை வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
₹ 170.00 ₹ 170.00

Not Available For Sale

This combination does not exist.