கும்பல்
கும்பல் - சரண்குமார் லிம்பாலே - தமிழில்: ம.மதிவண்ணன்
நான் ஒரு மனிதன். ஒரு மனிதனாக நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. சாதியை அரசியலமைப்புச் சட்டமே ஒழித்துவிட்டது. இப்போது யாரும் தீண்டத்தகாதவன் இல்லை. தலித்துகள் கோயிலுக்குள் போகலாம். சாதி இந்துக்களுக்கான தண்ணீர்த் துறைகளில் தலித்துகளும் தண்ணீர் எடுக்கலாம். சாதி இந்துக்களுடன் சம உரிமையுடன் சேர்ந்து வாழலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அழகிய கனவு இது. ஒரு மனிதனுக்குரிய மரியாதையுடன் நான் இந்த ஊருக்குள் சுற்றி வருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எனது மனிதத் தன்மையைக் கொண்டாடிப் போற்றுகிறேன். எனது சான்றிதழ்களின்படி நான் மனித சாதியைச் சேர்ந்தவன். எனது எல்லாச் சான்றிதழ்களும் பள்ளியில் இருக்கின்றன. நான் எதை மறைத்திருக்கிறேன்? நான் ஒரு மனிதன். உடலளவில் மட்டுமல்ல சாதியைப் பொறுத்த மட்டிலும் நான் மனிதன். என்னடைய தாய் தந்தையின் சாதி வேண்டுமானால் மனிதன் என்று குறிப்பிடப்படாமல் இருக்கலாம். அதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது? என்னை ஒரு மனிதன் என்று ஏற்றுக் கொள்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது? ஆனந்த் தன்னைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனைப் பள்ளியில் சேர்க்கும் போது, அவனது தந்தை அவனது சாதியை மாற்றிவிட்டார். சான்றிதழில் சாதியை மாற்றிவிட்டாலும், அவனது உண்மையான சாதி அவனது மனதில் இருந்து மறைந்துவிடவில்லை.