குமார சம்பவம்
குமார சம்பவம் - A.V. சுகவனேஸ்வரன்
காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான சிவ பார்வதி காதல் வைபவம்தான் குமாரசம்பவம். அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுகிறது இந்தக் காவியம். இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின் காதலர். குமாரசம்பவத்தை இப்படிக் குறிப்பிடுகிறார் தாகூர் - 'எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது. காதலின் நிரந்தரத் தன்மையை வர்ணிக்கிறது. காதல் கொண்ட இதயத்தின் தூண்டுதல்களையும் வேண்டுகோளையும் தியாகத்தையும் இது விளக்குகிறது. காவியத்தின் முடிவில் காதல் ஜெயிக்கிறது. நூலாசிரியர் அ.வெ. சுகவனேச்வரன் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பொருள் ஆழம், எளிமை, இனிமை... முக்கனிகளாக இந்தமூன்றும் அமைந்து இவரது எழுத்தை ருசி ஆக்குகின்றன.