Skip to Content

கதவைத் திற காசு வரட்டும்!

கதவைத் திற காசு வரட்டும்! - டி.ஏ.விஜய்
பேராசை பெருநஷ்டம், கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே, கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்கப் பழகிக்கொள். இப்படி பல அட்வைஸ்களை வாரி வழங்க ஆயிரம் பேர் கிடைப்பார்கள். பிசினஸா, அதெல்லாம் உனக்குச் சரிவராது. பங்குச் சந்தையா, அதில் ரிஸ்க் அதிகம். மாதா மாதம் சம்பளம் வாங்கிக்-கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைக் கழிப்பதை விட்டுவிட்டு ஏன் உனக்கு இந்தத் தொழிலதிபர் ஆசை? இப்படி நம் கனவுகளைச் சிதறடிக்க நண்பர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் திரண்டு வருவார்கள். இந்தப் புத்தகம் உங்களுக்கு அளிக்கப்போகும் அட்வைஸ் நீங்கள் இதுவரை கேட்டிராதது. நீங்கள் மேலும் மேலும் சம்பாதிக்கவேண்டும். கார், பங்களா, மேலும் பெரிய கார், மேலும் பெரிய பங்களா என்று வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும். நீங்கள் மாதச் சம்பளக்காரர் என்றால் விரைவில் ஒரு பிசினஸ் தொடங்கவேண்டும். நீங்கள் ஒரு லட்சாதிபதி என்றால் விரைவில் ஒரு கோடீஸ்வராக வேண்டும். பேராசை குற்றமில்லை. பணம் சம்பாதிப்பது தவறில்லை. உங்கள் வாழ்நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதும், மேலே மேலே உயரவேண்டும் என்று ஆசைப்படுவதும் இயற்கையானது, இயல்பானது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைத் திறக்கும்போதும் சில கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்போகின்றன. பணம் கொட்டப்போகிறது. நீங்கள் தயாரா?

₹ 245.00 ₹ 245.00

Not Available For Sale

This combination does not exist.