Skip to Content

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் கற்றதும்... பெற்றதும்...! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக துக்கங்கள் கொண்ட ஒரு தனி மனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து, அன்றாடம் தான் உறிஞ்சிக்கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படைத்த தொடர் கட்டுரைதான் ‘கற்றதும்... பெற்றதும்...' மொத்தமாக இந்தக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நிகழ்காலத் தகவல் களஞ்சியமாகவே அவை உருப்பெற்றிருப்பதை உணர முடியும். ‘கசப்பு மாத்திரையை இனிப்பு தடவிக் கொடுப்பதுபோல்...' என்றொரு சொலவடை தமிழில் உண்டு. ஆனால், சுஜாதாவின் கையாளும் நேர்த்தி காரணமாக எவ்வளவு கசப்பான, கடினமான விஷயங்கள்கூட முழுக்க முழுக்க சுவைக்கத் தகுந்த இனிப்புப் பலகாரமாகவே மாறிவிடுவது ஓர் அதிசயம்தான். ‘கற்றதும்... பெற்றதும்...' விகடனில் தொடங்கப்பட்டது எப்படி என்பது முதல், இன்றும் அது தொடர்ந்துகொண்டிருப்பது வரையிலான முழு நீள வரலாற்றை இதே புத்தகத்தில் சுஜாதாவின் முன்னுரையில் அறிந்துகொள்ளலாம். முன்னுரையில் தொடங்குங்கள்... முடியும்வரை நிறுத்த மாட்டீர்கள்!
₹ 375.00 ₹ 375.00

Not Available For Sale

This combination does not exist.