Skip to Content

கற்பது உலகளவு

கற்பது உலகளவு - கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்
கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கத் தேவையில்லை. அழியாத செல்வமாம் கல்வியால் உயர்ந்த நிலையை அடைந்து உன்னத வாழ்வு வாழலாம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. கல்வியறிவுதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அதிலும் இளம் தலைமுறையினரின் கல்வியே நாட்டின் பலமான அடித்தளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கு இலக்கணம் வகுத்துவைக்கும் அளவுக்கு கல்வியில் உயர்ந்த நிலையில் இருந்தது தமிழ்நாடு. அதனால்தான் ‘கல்வி சிறந்த தமிழ்நாடு' என்றார் பாரதி. அப்படிப்பட்ட கல்வியின் பயன்கள் பற்றியும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இன்று உருவாகியிருக்கும் உலகளாவிய வாய்ப்புகளைப் பற்றியும் அந்த வாய்ப்புகளைப் பெற எப்படித் தயாராக வேண்டும் என்பதைப் பற்றியும் ‘கற்பது உலகளவு' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. பொதுவாக மேல்நிலைக் கல்வி முடித்தவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், விவசாயம், உணவு உற்பத்தி, சுற்றுலா, வன உயிரினம், டிசைனிங் என இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பட்டப் படிப்பு வாய்ப்புகளையும் அவற்றைப் பெற என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியரும் கல்வியாளருமான தா.நெடுஞ்செழியன். பட்டப் படிப்பு பயிலவுள்ள மாணவர்களுக்கு பல வகையிலும் பயனுள்ள தகவல்களைக் கொண்ட இந்த நூல், மாணவர்களுக்கு மாபெரும் துணையாகத் திகழும்!
₹ 400.00 ₹ 400.00

Not Available For Sale

This combination does not exist.