கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்
கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் அம்மா' - ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் கேட்க வேண்டும் என்று விரும்பும் உன்னதமான வார்த்தை. அந்த வார்த்தையைச் சொல்லும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஆக ஒரு பெண், வாழ்க்கை முறையிலும், குறிப்பாக உணவு முறையிலும் சில முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம், கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அவற்றின் அவசியமும் என்னென்ன? கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன? உணவை வெறுக்கவைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல அவளுடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் உள்ளடக்கியது. குழந்தைப்பேறு என்ற ஒரு பரவசத்தை கணவன்-மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம், கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு. |