கனவுத் தொழிற்சாலை
கனவுத்
தொழிற்சாலை - சுஜாதா ‘கனவுத் தொழிற்சாலை’ 1979-ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. சினிமா உலகத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. புகழ் வெளிச்சத்தின் உச்சத்திலிருந்து வீழ்ந்து விடுவோமோ என்று பயப்படும் சூப்பர் ஸ்டார் அருண், அவனை விரும்பும் சக நடிகை ப்ரேமலதா, ஒரு வரி வசனம் பேசும் வாய்ப்புக்காக அல்லாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மனோன்மணி, சினிமாவில் பாடல் எழுதும் முயற்சிக்காக குடும்பத்தையே சிரமத்தில் ஆழ்த்தும் அருமைராசன் என பலதரப்பினரும் இக்கதையில் ரத்தமும் சதையுமாக உலா வருகிறார்கள். செல்லுலாயிட் உலகின் நன்மை தீமைகள், சத்தியம், அசத்தியம், நேர்மை, நேர்மையின்மை என அனைத்தையும் தெள்ளத் தெளிவாக உணர்த்தும் கதை. |