Skip to Content

கம்பலை

கம்பலை - நாஞ்சில் நாடன்
கம்பனிடம் யாசகம் பெற்றால், 'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன். அர்த்தமாகும் மொழியிலும் எழுதலாம். அலையடித்து ஓசை எழுப்பும் பாற்கடலின் கரையை அடுத்த ஒரு பூனை, மொத்தப் பாற்கடலையும் நக்கிக் குடித்து விடுவேன் என்று ஆசைப்பட்டுப் புகுந்ததைப் போல, ஆர்வத்தால் பேசுகிறேன். இந்த மொழியின் சொற்கள் என்னைச் சுழிபோல் உள்ளிழுத்துக் கொள்கின்றன. எம் செம் மூதாய், கி.ரா. சொன்னார், “உங்களால் இனி மீள முடியாது பாத்துக்கிடுங்கோ " என்று. அது வாழ்த்தா, கையறு நிலையா என்ற சந்தேகம் இன்றுமுண்டு எனக்கு. அந்தத் தேடலின் வினைகளே இந்த நூலின் சில கட்டுரைகள், அது உறக்கமோ, வயிரமோ, கம்பலையோ, சக்கையோ, கருப்பட்டியோ எதுவானாலும்!
₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.