கிதார் இசைக்கும் துறவி
கிதார் இசைக்கும் துறவி - எஸ். ராமகிருஷ்ணன்
நம் பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, கதைகளால் ஆனது என்கிறார் கவிஞர் முரியல் ருகீசர். கதை தான் அன்றாடம் என்பதற்கான வெளி உருவத்தைக் கொடுக்கிறது. இந்தத் தொகுப்பில் பதினெட்டுச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாக விரிவடைகின்றன. நாம் அறிந்த மனிதர்களின் அறியாத வாழ்க்கையைக் கதை பேசுகிறது. துறவியின் கிதார் இசையில் துவங்கி கதவைத் தட்டும் கதை வரையான புனைவின் மாயச்சுழல் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. இந்த கிதார் இசைக்கும் துறவி நூல் டிசம்பர் 2023 வெளியானது.