கி.மு. கி.பி.
கி.மு. கி.பி. - மதன்
மனிதனால் இப்போது பூமியிலிருந்தே வேற்று கிரகங்களுக்கும் செல்ல முடிகிறது. வேறொரு கிரகத்தில் தன்னால் வாழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு விஞ்ஞானத்தில் வியக்கவைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது மனித இனம். ஆனால், ஆதி மனித இனம் ஓர் இடத்தில் சேர்ந்து வாழ்வதற்கே பல்லாயிரம் ஆண்டுகள் ஆனதாக வரலாறு சொல்கிறது. ஒரு செல் உயிரியாகத் தோன்றி பின் காடுகளில் அலைந்து நெருப்பைக் கண்டு அஞ்சி பின்னர் அந்த நெருப்பில் உணவைச் சுட்டு சுவைக்கும் நிலைக்கு உயர்ந்தது மனித இனம். மனிதனுக்கு முன் பூமியில் வாழ்ந்த உயிரினங்கள், மனிதன் தோன்றி, பின்பு அவன் படிப்படியாக முன்னேறி விவசாயம் செய்து ஒன்றாக வாழும் நிலைக்கு எப்படி உயர்ந்தான் என்பது வரையான மனிதகுல பரிணாம வளர்ச்சியை விளக்கி, ‘குமுதம்' இதழில் மதன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இந்தப் பூமியில் முதலில் தோன்றியது ஒரு பெண் என்பது போன்ற ஆச்சர்யமூட்டும் தகவல்கள் பலவற்றை தன் வாசகர்களை வசீகரிக்கும் எழுத்து நடையில் சொல்லியிருக்கிறார் மதன். மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இனி உங்களுக்காக...