Skip to Content

கையளவு களஞ்சியம்

கையளவு களஞ்சியம் - டாக்டர் சங்கர சரவணன்
வாழ்வில் வெற்றிபெற பல்வேறு துறை சார்ந்த அறிவு அவசியமாகிறது. படித்து முடித்துவிட்டு ஒரு வேலையில் சேர்வதென்றால் போட்டித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறவேண்டும். எனவே, வரலாறு, ஆட்சியியல், புவியியல், பொது அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், இலக்கியம், விளையாட்டு, சமயம் ஆகிய துறைகளைப் பற்றி தெரிந்திருந்தால் சிறந்த நிலையைப் பெறமுடியும். ‘சுட்டிவிகடன்’ வருடந்தோறும் ‘க்விஸ் விஸ்’ நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து ‘கையளவு களஞ்சியம்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். இந்திய வரலாற்றில் சிந்துச்சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, பழந்தமிழக வரலாற்று சான்றுகள், தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள், உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல் உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது. மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல், மக்கள் வாழ்வில் அறிவியலின் பங்கு வரை, உடல் கூறுகளின் இயக்கம் முதல் மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை, சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, விளையாட்டுத் துறையின் சாதனையாளர்கள் முதல் ஒவ்வொரு விளையாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் வரை, உலக நாடுகளின் அரசியல், பூகோளம், நாட்டுப்புறவியல் மற்றும் சமயங்கள் வரை பல்வேறு துறைகளைப் பற்றிய விறுவிறு தகவல்களைச் சுவைபடத் தொகுத்து எழுதியுள்ளார் டாக்டர் சங்கர சரவணன். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. அனைத்துத் தகவல்களும் ஒரு வரிச் செய்திகளாக இருப்பதால், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்துகிறவர்களுக்கும் இந்நூல் சிறந்த பொக்கிஷமாகத் திகழும்.
₹ 300.00 ₹ 300.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days