Skip to Content

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

அரசுகள் அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமை வாதிகள் (கன்சர்வேட்டிவ்) ஆயினும் சரி அதிதீவிர - ஜனநாயகவாதிகள் ஆயினும் சரி அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவர் மிஞ்சுவதில் போட்டி போட்டனர். இவற்றையெல்லாம் அவர் துடைத்து விட்டுக் கொண்டார். நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார். அவைகள் எதையும் பொருட்படுத்தவில்லை. மிகவும் நிர்ப்பந்தமான கட்டாயத் தேவை ஏற்பட்ட போதுதான் அவைகளுக்குப் பதிலளிப்பார். கோடிக்கணக்கான சக தொழிலாளர்கள் தொலைதூர சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பா இருந்தும் அன்பும் அபிமானமும் பொங்க, மதிப்பும் பாராட்டும் பெருக இருந்த அந்த கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்ணீர் குளமாக இந்த மாமனிதர் மறைந்துவிட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூறமுடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர் கூட இருந்ததில்லை. யுக யுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.

₹ 1,500.00 ₹ 1,500.00

Not Available For Sale

This combination does not exist.