காந்தியின் நிழலில்
காந்தியின் நிழலில் - எஸ்.ராமகிருஷ்ணன்
காந்தி அளவிற்கு இந்திய மக்கள் மீது பெருமதிப்பும் நம்பிக்கையும் கொண்ட ஒருவரைக் காணமுடியாது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் எளிய மக்களில் ஒருவராக இருந்தார். வேறுவேறு சமூகப் பின்புலம் கொண்ட மனிதர்களைப் போராட அழைப்பதும் களத்தில் அகிம்சாமுறையில் போராடச் செய்வதும் மிகக் கடினமான விஷயம். கஷ்டப்பட்டு முயற்சி செய்தால் ஒரு முறை ஒன்று சேர்க்கலாம். ஆனால் விரும்பிய நேரமெல்லாம் காந்தியால் இந்திய மக்களை ஒன்று சேர்க்க முடிந்திருக்கிறது. போராட முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம் காந்தியின் குரலை மக்கள் கடவுளின் குரல் போலவே கருதினார்கள்.