காந்தியோடு பேசுவேன்
காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்
தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது. காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார். காந்தி தனது தந்தையைப் பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர். தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராகத் தன்னை உணர்ந்தவர். அவரும் ஒரு நல்ல தந்தையில்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார். தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன். இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளாது. அது வலிமையானது. எளிதில் வீழ்ந்துவிடாதது. உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே.