காண் என்றது இயற்கை
காண் என்றது இயற்கை - எஸ். ராமகிருஷ்ணன்
இயற்கையை, கால நேரமின்றிப் பார்த்துப் பார்த்துப் பார்த்து அலுக்காதவனே நல்ல கலைஞனாயிருக்கிறான். தாகூரின் வழிபாடும் எல்லாமே இயற்கை சார்ந்தவைதான். பிரபஞ்சத்துடனான மானசீக உரையாடலை இயற்கையின் புலனாகாத பல ஊடகங்கள் வழியாகவே நாம் நடத்தியாக வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணனுக்கு, பிரபஞ்சத்தின் மூளையாக, உடலாக, பறவையும் மிருகமும், மலையும், செடி கொடியும், எறும்பும், சிறு செடியும், பெரு நிழலும், மழையும், நதியும் இயற்கைப் பருண்மையாக, அந்த உரையாடலுக்கான எல்லாச் சாத்தியங்களையும் வழங்கியிருப்பதை இந்தத் தொகுதியில் நன்றாக அனுபவிக்க முடிகிறது.