Skip to Content

காமசூத்திரம்

காமசூத்திரம் - வாத்ஸ்யாயனர்
இந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றான காமசூத்திரம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதில் வியப்பேதுமில்லை. காரணம், மனித குல வரலாற்றிலேயே காமம் குறித்தும் பாலுறவு குறித்தும் விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதப்பட்ட முதல் வெளிப்படையான பிரதி இதுவே. பெரும்பாலும் ரகசியமாக மட்டுமே வாசிக்கப்பட்டுவந்த காமசூத்திராவை ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் பலர், வியப்பூட்டும் ஒரு முக்கியமான உண்மையைக் கண்டறிந்தனர். பலரும் நினைப்பதைப்போல் காமசூத்திரம் விரசமான ஒரு புத்தகம் அல்ல. அதன் பெரும்பகுதி காதலின் அழகையும் தத்துவத்தையும் சுவைபட விவரிக்கிறது; வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இதற்காகவே காமசூத்திரத்தை மீண்டும் மீண்டும் நாம் வாசிக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள். பிரச்னை என்னவென்றால் வாசிப்பதற்கு ஏற்ற ஒரு பிரதி தமிழில் இல்லை. விரசங்கள் இன்றி இன்றைய தமிழில் நவீனமாகவும் சுவையாகவும் காமசூத்திரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி இங்கே மேற்கொள்ளப்படவேயில்லை. இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்குகிறது. வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் எளிய வடிவில், அழகு தமிழில்.
₹ 225.00 ₹ 225.00

Not Available For Sale

This combination does not exist.