Skip to Content

இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகள் : அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி - அண்ணல் அம்பேத்கர்
சாதி இழிவை சுமந்து திரியும் சமூக அமைப்பை அகற்ற விரும்பும் இயக்கக்காரர்களுக்கும் அறிவுத்துறையிலிருந்து அதனை ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கும் எதிர்கால மாணவர்களுக்கும் எப்போதும் பிரமிப்பையும் பேரறிவின் வனப்பையும் வழங்கும் பிரதியாக அண்ணல் அம்பேத்கரின் இக்கட்டுரை இருந்து வருகிறது. இன்று உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் வகுப்பினர் அம்பேத்கரை வாசிக்கும் ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் முதன்மை பிரதியாகவும் உள்ளது. 1916 இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்ட அதே ஆண்டில் சர்வதேச சமூக அரங்கில் அவரால் எழுதி வாசிக்கப்பட்ட இக்கட்டுரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில், இந்து ஜாதிய கொடுஞ் சமூகம் விளைவித்து வரும் சமூகத் தீங்கை அன்றாடம் நிகழ்த்தும் சூழலில், மீண்டும் மீண்டும் எளிய மக்களிடம் அண்ணல் அம்பேத்கரையும் பெரியாரையும் நமது மக்கள் மீள்வதற்கான அறிவாயுதங்களாக சமூகத்தின் முன் வைக்கும் போக்கில் இந்நூலை மீளச்சு செய்வதில் கருப்புப் பிரதிகள் பெருமிதம் கொள்கிறது.
₹ 50.00 ₹ 50.00

Not Available For Sale

This combination does not exist.