இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு - இரண்டாம் பாகம்
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு - இரண்டாம் பாகம் - அ.இராமசாமி
1965 ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா. செயப்பிரகாசம், சின்னச்சாமி என்பவர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ஆம் தேதி இந்த போராட்டம் துவங்கியது என்கிறார். பிற்காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட, எல். கணேசன், கா. காளிமுத்து, பெ. சீனிவாசன், துரை முருகன் உள்ளிட்டவர்கள், இந்த 1965ஆம் வருட இந்தித் திணிப்புஎதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர் இந்தப் போராட்டத்தில் தி.மு.க. தலைவர்கள் தீவிர பங்களிப்பைச் செலுத்தினாலும், இது மாணவர்களாகவே முன்னெடுத்த போராட்டம் என்கிறார், மதுரையில் அப்போது கல்லூரி மாணவராக இருந்து போராட்டத்தில் பங்கெடுத்த பேராசிரியர் ராமசாமி. தி.மு.க. முன்னாள் அமைச்சரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவருமான துரைமுருகனும் இதே போன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ஆனால், தமிழுணர்வாளர்களும் தி.மு.கவும்தான் இதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தது என்கிறார் செயப்பிரகாசம்.