Skip to Content

இளையராஜாவுடன் இசையிரவு

இளையராஜாவுடன் இசையிரவு - குமார் துரைக்கண்ணு
இசையில் ஆழங்கால்பட்டவர்களையும் பாமரர்களையும் ஒருங்கே தன்னுடைய இசையால் மகிழ்ச்சியடைய வைப்பவர் இளையராஜா. அவருடைய இசையில் முகிழ்த்த பாடல்களிலிருந்து முத்தெடுப்பது போல் அரிய 35 பாடல்களைப் பற்றி ஒரு ரசிகனின் அனுபவத்தை முன்னிறுத்தி, ‘இந்து தமிழ் திசை’ இணையத்தில் குமார் துரைக்கண்ணு எழுதியதன் தொகுப்பே இந்நூல். இணையத்தில் இந்தக் கட்டுரைகள் வெளிவரும்போதே பெரும் வரவேற்பைப் பெற்றன. நீண்ட பயணங்களின் துணையாக, உறவுகள் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாக, புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் மனத்திலிருந்து எழும் மண்வாசனையாக... என ஒவ்வொருவருக்கும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் குவியல்கள் நூலின் பக்கங்கங்கள் தோறும் அணிவகுக்கின்றன.
₹ 150.00 ₹ 150.00

Not Available For Sale

This combination does not exist.