Skip to Content

எனக்குள் ஒரு கனவு!

எனக்குள் ஒரு கனவு! - ராஷ்மி பன்சால் தமிழில்: ரவிபிரகாஷ்
ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்களிடம் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. ஐ.ஐ.டி. படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குப் போகாமல், சொந்தத் தொழில் தொடங்கியவர்களின் சாதனைக் கதைகளின் தொகுப்பு அது. அடுத்து, ‘கனெக்ட் தி டாட்ஸ்’ என்னும் புத்தகத்தை ‘புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!’ என்னும் தலைப்பில் தமிழில் வெளியிட்டது விகடன் பிரசுரம். ஐ.ஐ.டி. படிக்காமலே, சுய தொழிலில் இறங்கி, வெற்றி கண்டவர்களின் கதைகளின் தொகுப்பு அது. இதோ, ‘எனக்குள் ஒரு கனவு!’. ராஷ்மி பன்சாலின் ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். “வருவாய் ஈட்டுவதையே பிரதானமாகக் கொள்ளாமல், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கோணத்தில் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்து, வெற்றிகரமாக நடத்திவரும் தொழிலதிபர்களைப் பற்றிய உண்மைக் கதைகளின் தொகுப்பு இது! அந்த வகையில் முந்தைய இரண்டு புத்தகங்களைவிட இது இன்னும் மேலானது!” என்கிறார், ராஷ்மி பன்சாலின் புத்தகங்களை தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் ரவிபிரகாஷ். ‘மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா?’ என வருந்தி, அதற்காக நவீன கழிப்பறைகளை வடிவமைத்த பிந்தேஷ்வர் பதக்... குப்பை பொறுக்கும் சிறுவர்களின் நிலைக்கு இரங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்காகவே நிறுவனம் தொடங்கிய அனிதா அஹுஜா... பசியால் வாடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காகவே ‘அட்சய பாத்திரம்’ என்னும் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வரும், பெங்களூர் இஸ்கான் தலைவராக இருக்கும் மது பண்டிட் தாஸா... என இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சை உருக்கக்கூடியது. படியுங்கள்; ரசியுங்கள். ‘நாமும் நம் பங்களிப்பாக இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்கிற உத்வேகத்தை இந்தப் புத்தகம் உங்களுக்குள் எழுப்புவதை உணர்வீர்கள்!
₹ 175.00 ₹ 175.00

Not Available For Sale

This combination does not exist.