Skip to Content

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்! - பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா தமிழில்: வீயெஸ்வி
சங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சென்ற மேதைகள் ஏழுபேருக்கு, இன்றைய பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் செலுத்தும் வந்தனம் _ இந்த நூல். பாம்பே ஜெயஸ்ரீயும், டி.எம்.கிருஷ்ணாவும் இணைந்து ‘Voices Within’ என்ற தலைப்பில் எழுதிய காபிடேபிள் புத்தகத்தை சுருதி விலகாமல், தாளம் தப்பாமல் தமிழாக்கம் செய்திருக்கிறார் வீயெஸ்வி. அரியக்குடி, ராஜரத்தினம் பிள்ளை, செம்மங்குடி, ஜி.என்.பி., பாலக்காடு மணி ஐயர், எம்.எஸ்., புல்லாங்குழல் மாலி... இந்த ஏழு ஸ்வரங்களுக்குள்தான் எத்தனை ராகம்! முன்னோர்களின் பாமாலைகளை பூமாலைகளாகச் சூட்டி, கச்சேரி மேடையை அவரவர் பாணியில் அலங்கரித்த இவர்களைத் தொடர்ந்து மேடையேறிய பலரும், இந்த மேதைகளை முன்னோடியாகக் கொண்டு, இவர்கள் போட்டுத் தந்த ராஜபாட்டையில்தான் இன்றும் பயணித்து வருகிறார்கள். அந்த வகையில், ஏழு கலைஞர்கள் இசையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தின் எல்லையை இந்த நூலின் வழியாக பாம்பே ஜெயஸ்ரீயும், டி.எம்.கிருஷ்ணாவும் விளக்கியுள்ளனர்.
₹ 190.00 ₹ 190.00

Not Available For Sale

This combination does not exist.