சூத்திரர்: ஒரு புதிய பார்வை
சூத்திரர்:
ஒரு புதிய பார்வை - காஞ்சா அய்லய்யா கார்த்திக் ராஜா கருப்பசாமி - தமிழில் : தருமி இந்து வர்ண அமைப்பில் நான்காவதாக வைக்கப்பட்டிருக்கும் சூத்திரர்களின் சமூக, அரசியல், ஆன்மிகப் போராட்டங்களை முற்றிலும் புதிய கோணங்களிலிருந்து ஆராயும் முக்கியமான நூல் இது. வெவ்வேறு சமூக அறிவியல் துறைகள் சார்ந்த ஆய்வாளர்களின் செழுமையான கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சாதியமைப்பு குறித்த நுட்பமான பார்வைகளும் ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்புகளின் செயல்திட்டம் குறித்த கூர்மையான விமரிசனங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்தியா ஒரு மெய்யான ஜனநாயக நாடாக மலர வேண்டுமானால் சமூகத்தின் எல்லாத் தளங்களிலிருந்தும் சாதியப் பாகுபாடு களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு அதற்கான வழிமுறைகளையும் இந்நூல் விவாதிக்கிறது. தலித் அரசியல், இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள், பகுஜன் எனும் கருத்தாக்கம், அம்பேத்கர், புலே போன்றோரின் சிந்தனைகள், பழங்குடிகளின் எதிர்காலம், அடையாளச் சிக்கல்கள் என்று தொடங்கி பல முக்கியமான தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் நம் அனைவருக்கும் தேவைப்படும் ஓர் அரசியல் ஆவணத்தைச் சரளமாக மொழிபெயர்த்து அளித்திருக்கிறார் தருமி.
|