Skip to Content

சத்யஜித் ரே

சத்யஜித் ரே வாழ்வும் வழியும் - வீ.பா.கணேசன்
இந்திய சினிமாவின் பிதாமகன் பால்கே என்றாலும் கூட, சத்யஜித் ரே-யின் அழகியல், வங்க மக்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கை மற்றும் அவர்களின் இலக்கியத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை யாராலும் எளிதில் மறுக்க முடியாது. உலகம் முழுதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமாவை அலசி ஆராயும்போது, அவர்களால் சத்யஜித் ரே-யை தவிர்த்துவிட்டு இந்திய சினிமாவை ஆராய முடியாது. புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் விபூதி பூஷணின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இவரது முதல் படம் பாதேர் பாஞ்சாலி. இந்தப் படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றது. பாதேர் பாஞ்சாலி படத்தை தொடங்கியது முதலே அவருக்கு படத்தை முடிக்க முடியாமல் பெரும் பண நெருக்கடி. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியும் படம் முடியவில்லை. இறுதியில் மேற்கு வங்க அரசுதான் அவரது உதவிக்கு வந்தது. முதன் முறையாக ஒரு மாநில அரசு திரைப்படத் தயாரிப்பாளராக ஆனது. அந்த உதவிக்குக் காரணம் ‘பாதேர் பாஞ்சாலி' என்ற பெயர்தான். பாதேர் பாஞ்சாலி (Song of the road) என்றால் சாலையின் இசை! பாதேர் பாஞ்சாலியில் மெளனப் படங்களில் நடித்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்த 80 வயது பாட்டியை நடிக்க வைத்து அசத்தினார். அந்த மூதாட்டியும் நடிப்பில் சிகரம் தொட்டார். ரே தனது வாழ்க்கையில் குறைந்த அளவே படங்களை இயக்கினாலும் இன்றளவும் அவரது புகழ் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறது. இதற்கு சாட்சி இவரைத் தேடி ஆஸ்கர் விருது கல்கத்தாவுக்கே வந்தது. இவரது மறைவுக்குப் பின் இந்திய அரசு, சிறப்பு தபால் தலைகளை 1994-ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட்டது. 1998-ல் `பாரத ரத்னா' விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days