Skip to Content

சருமம் A to Z

சருமம் A to Z - ஆர். வைதேகி
‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்று முடியும் ஒரு திருக்குறள், எலும்புகளை தோலால் போர்த்தப்பட்ட உடம்பு என்கிறது. ஆம், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளுக்கும் பாதுகாப்பாக, தடுப்பாக இருப்பது தோல். நம் உறுப்புகளில் ஏதேனும் நோயோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அது நம் தோலில் அறிகுறிகளாக வெளிப்படும். குழந்தைப் பருவத்தில் வேறாகவும், இளம் வயதில் வேறாகவும், முதுமையில் வேறுவிதமாகவும் மாற்றம் காண்பது நம் சருமம். அந்தச் சருமத்தை நன்றாகப் பராமரித்து வந்தால் முதுமையிலும் இளமையாகத் தோன்றலாம். பொதுவாக சருமப் பராமரிப்பில் எப்போதுமே பெண்கள்தான் கவனமாக இருப்பார்கள். நம் ஆரோக்கியத்திலும் அழகிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சருமத்தைப் பற்றி அவள் விகடனில் தொடர் கட்டுரைகள் வெளியாகின. அவற்றின் தொகுப்பு நூலே இது. சரும மருத்துவ, நிபுணர்களின் ஆலோசனைகள், சினிமா மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் சரும அழகுக்கான டிப்ஸ், சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, தழும்புகள், பருக்கள் போன்ற பிரச்னைகளைப் போக்குவதற்கான தீர்வுகள் என சருமப் பராமரிப்பு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தருகிறது இந்த நூல் மொத்தத்தில் இது, சரும்த்துக்கான சகலகலா வழிகாட்டி!
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.