சரமகவிகள்
சரமகவிகள் - அகிலன்
உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும் போர் அனுபவங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு தளத்தைக் கட்டமைக்கிறது. பரிச்சயமான சொற்களையும் படிமங்களையும் உடைப்பதன் மூலம் இவருடைய குறுகத் தரித்த கவிதை மொழி உருவாகியிருக்கிறது. போரும், தொடரும் வன்முறைகளும் ஊடாடும் சமகால உலகக் கவிதைகளின் பிரத்தியேகமான, பன்முகத் தன்மை கொண்ட மொழியுலகுடன் இந்தக் கவிதை மொழி தன்னைச் சமாந்தரமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.