சிவப்பு ரிக்ஷா
சிறுகதை :
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றை வெகுஅநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை.

தன்னைச் சுற்றிலுமுள்ள உலகம் சிறிதும் பெரிதுமாக, சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குவதை ரசனையுடன் வெளிப்படுத்துபவை தி.ஜா.வின் கதைகள். அந்த இயக்கத்தின் ஆதாரப் புள்ளியான மனித இயல்பைக் கரிசனத்துடன் வெளிப்படுத்துகிறார். எளிய மனிதர்களின் அசாதாரணத் தருணங்களாக அவை உருமாற்றம் கொள்கின்றன.
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை